

தூத்துக்குடி:
தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசாமி கோவில் கொடை விழாவில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியை கீதாஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அப்போது மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசுகையில், இளைஞர்கள் நல்வழியில் செல்ல வேண்டும். அதுவும் ஆன்மீக பணியில் ஈடுபடுவது நல்ல காரியம். கோவில் விழாவில் ஒற்றுமையுடன் அனைவரும் பணியாற்றி எதிர்வரும் காலத்தில் தி.மு.க.விற்கு துணை நிற்க வேண்டும் என்றார்.
விழாவில் தர்மகர்த்தா பாண்டி, தலைவர் முருகேசன், செயலாளர் அய்யாச்சாமி, பொருளாளர் சீனிவாசன், விழாக்குழு தலைவர் மனோகரன், துணைத்தலைவர் சண்முகவேல், செயலாளர் மதியழகன், கவுரவ ஆலோசகர் சண்முகசுந்தரம், இளைஞர் அணி தலைவர் வெற்றிவேல், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், கோட்டுராஜா, செந்தில்குமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பர்ட், நிர்வாக கமிட்டியினர் முருகன், வேல்ராஜ், பாக்கியசெல்வன், முருகேஸ்வரன், முருகேசன், மோகன், ராஜன், கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.