ஈரோடு தி.மு.க. மாநாட்டிற்கு 200 வாகனங்களில் பயணம்- கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை

ஈரோட்டில் தி.மு.க. மாநாடு 2 நாட்கள் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள 200 வாகனங்களில் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.
ஈரோடு தி.மு.க. மாநாட்டிற்கு 200 வாகனங்களில் பயணம்- கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. செயல்தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு ஆய்வுகள் என பணியாற்றி வரும் சூழ்நிலையில் தலைவர் கலைஞர் வழிகாட்டுதலின்படி ஈரோட்டில் வரும் 24, 25-ம் (சனி, ஞாயிறு) 2 நாட்கள் மாநாடு  நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கிளைக்கழகம் சார்பில் பஸ், வேன், கார், உள்ளிட்ட 200 வாகனங்களில் ஈரோடு மாநாட்டிற்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே அனைத்து அணி நிர்வாகிகள், பொதுக்குழு,  செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டு வடக்கு மாவட்டத்திலிருந்து அதிக வாகனத்தில் சென்று செயல்தலைவர் ஸ்டாலினுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அணி திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com