காமன்வெல்த் பேட்மிண்டன் - பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

பேட்மிண்டன் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தனது 2-வது சுற்றில் பாகிஸ்தானை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது. #GC18 #CWG2018
காமன்வெல்த் பேட்மிண்டன் - பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா
Published on

காமன்வெல்த் போட்டி பிரமாண்ட கலைநிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. போட்டிகள் இன்று முதல் நடைபெற்று வருகின்றன. பேட்மிண்டன் அணிகளுக்கான இடையிலான போட்டியில் ‘ஏ’ அணியில் இடம் பிடித்துள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் இலங்கையுடன் மோதியது.

இதில் இந்தியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் வெற்றி பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரன்கிரெட்டி- சித்ரஸ்ரெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி போபண்ணா- சிக்கிரெட்டி ஜோடியும் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரைவ் சோப்ரா- ஷிவானி ஜோடியும் வெற்றி பெற்றன.

2-வது சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதிலும் இந்திய அணி 5-0 என வெற்றி பெற்றது. ஐந்து பிரிவிலும் ஒரு கேம்ஸ்-ஐ கூட இந்திய அணி இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சுற்றில் இந்தியா ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நாளை நடைபெறுகிறது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com