ஷுப்மான் கில்லை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக நியமிக்க வேண்டும்: கவுதம் காம்பிர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் பதவியை ஏற்க அதிகமான வீரர்கள் இல்லை. ஷுப்மான் கில்லை நியமிக்க வேண்டும் என காம்பிர் தெரிவித்துள்ளார்.
கவுதம் காம்பிர், ஷுப்மான் கில்
கவுதம் காம்பிர், ஷுப்மான் கில்
Published on

ஐபிஎல் டி20 லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணி 2012 மற்றும் 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டு முறையும் கவுதம் காம்பிர்தான் கேப்டனாக இருந்தார்.

கடந்த முறை காம்பிர் டெல்லி அணிக்குச் சென்றார். இதனால் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2019 சீசனில் சக வீரர்களை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போட்டியின் போதே மோதல் ஏற்பட்டது வெளிப்படையாக தெரியவந்தது.

இந்நிலையில் இளம் வீரரான ஷுப்மான் கில்லை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் பதவிக்கு அதிகப்படியான வீரர்கள் இல்லை. நான் ஷுப்மான் கில்லுக்கு ஆதரவாக இருப்பேன். என்னுடைய ஆதரவு இளைஞருக்குதான்.

தினேஷ் கார்த்திக் இன்னும் இரண்டு வருடங்கள் விளையாடலாம். எதிர்பார்த்த அளவிற்கு அவர் சிறப்பாக விளையாடவில்லை. ஷுப்மான் கில்லுடன் புதிய முகத்துடன் செல்ல வேண்டும். அவரால் புதிய திட்டங்கள் மூலம் நல்ல முடிவுகளை கொடுக்க முடியும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com