பேஸ்புக், டிவிட்டர் மூலம் கேஸ் சிலண்டர் புக் செய்யும் முறை அறிமுகம்

சமூக வலைதளங்கள் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய முறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.
பேஸ்புக், டிவிட்டர் மூலம் கேஸ் சிலண்டர் புக் செய்யும் முறை அறிமுகம்
Published on

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றனர். எரிவாயு சிலிண்டர்கள் தொலைப்பேசி மற்றும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் முறை ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது.
 
இந்நிலையில், வடஇந்தியாவின் சில பகுதிகளில் தற்போது சமூக வலைதளங்கள் மூலமாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த முறை விரைவில் தமிழகத்திலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com