வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி பலி- 2 பேர் மீது வழக்கு

கோவை பீளமேடு அருகே வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
வழக்கு
வழக்கு
Published on

கோவை, ஏப். 28-

கோவை பீளமேடு அருகே உள்ள ஹட்கோ காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது72). இவர் நேற்று அதிகாலை கழிவறைக்கு சென்றார். அப்போது வி‌ஷவாயு தாக்கி மயங்கினார். அவரைக் காப்பாற்றச் சென்ற இரண்டாவது மகன் முரளியும் மயங்கினார். இவர்கள் 2 பேரையும் காப்பாற்ற சென்ற ஸ்ரீதரின் மூத்த மகன் பாலாஜி வி‌ஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வி‌ஷவாயு தாக்கி மயங்கிய ஸ்ரீதர், முரளி ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டிலிருந்து வெளியேறிய ஜெனரேட்டர் புகையால் பாலாஜி இறந்தது தெரியவந்தது. எனவே அந்த வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, அந்த வீட்டில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் பொறுப்பாளர் சுப்பிரமணி ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com