ராயபுரம் அருகே குப்பை லாரி மோதி போலீஸ்காரர் பலி

மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்த போலீசார்காரர் மீது குப்பை லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ராயபுரம்:

சென்னை, எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு மற்றும் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் பழனிக்குமார். இவர் மவுண்டில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று நள்ளிரவு அவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

முல்லைநகர் பணிமனை அருகே எஸ்.எம்.நகர் பகுதியில் வந்த போது சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியது.

இதில் நிலை தடுமாறிய பழனிக்குமார் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த குப்பை லாரி பழனிக்குமார் மீது ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பழனிகுமாரின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் ஆகும்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குப்பை லாரி டிரைவர் கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலை பள்ளத்தால் போலீஸ்காரரின் உயிர் பறிபோய் உள்ளது. அந்த பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com