டி.பி. சத்திரத்தில் கஞ்சா பதுக்கி விற்ற 9 பேர் கும்பல் கைது

டி.பி. சத்திரத்தில் கஞ்சா பதுக்கி விற்ற 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.பி. சத்திரத்தில் கஞ்சா பதுக்கி விற்ற 9 பேர் கும்பல் கைது
Published on

போரூர்:

அமைந்தகரையை அடுத்த டி.பி. சத்திரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்பனை மற்றும் சப்ளை செய்யப்பட்டு வருவதாக கீழ்ப்பாக்கம் துனை கமி‌ஷனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி கமி‌ஷனர் ஜெகதீசன் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது அங்கு உள்ள குடியிருப்பின் மொட்டை மாடியில் சிறிய பொட்டலங்கள் போட்டு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்கிற குணசேகரன், கருப்பு என்கிற ஞானசேகரன், தமிழரசன், செந்தில்குமார், வினோத்குமார், கவணன், வினோத், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கீர்த்தி வாசன், சரத்குமார் உள்ளிட்ட 9 பேரையும் மடக்கி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ஒரு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்

மேலும் டிபி சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக புகுந்து தொடர்ந்து சோதனை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com