

கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சி மேலவீதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37). லாரி டிரைவர். ஊரடங்கு உத்தரவு இருப்பதனால் வேலைக்கு செல்லாமல் 2
மாதம் வீட்டில் இருந்தார்.
இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று விவசாய தோட்டத்தில் பூச்சி மருந்து எடுத்துக் குடித்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அவரை
ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.