கெங்கவல்லி அருகே பஸ் டிரைவர் தற்கொலை

கெங்கவல்லி அருகே பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி ஊராட்சி வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் வெற்றிச்செல்வன் (வயது 33). இவர் ஆத்தூரில் உள்ள அரசு பணிமனையில் பஸ் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர். ஆனால் வரன் கிடைக்காத விரக்தியில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com