ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த கும்பல்

ஆண்டிப்பட்டி அருகே குடும்ப பிரச்சினையில் பெண் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண் மானபங்கம்
பெண் மானபங்கம்
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே அய்யனார்புரத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (34). இவரது மனைவி லோகநாயகி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் லோகநாயகி கோபித்துக் கொண்டு அமச்சியாபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

மேலும் காளிதாஸ் குறித்து க.விலக்கு போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காளிதாஸ் அவரது தாய் முனியம்மாள், உறவினர்கள் நாகஜோதி, ராஜ்குமார் ஆகியோர் லோகநாயகி வீட்டிற்கு சென்று அவரை தாக்கி சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளனர்.

இதேபோல் லோகநாயகி அவரது உறவினர்கள் அறிவானந்தம், காமாட்சி, சோனை, ராஜ்குமார், முத்துலட்சுமி ஆகியோர் காளிதாசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து காளிதாஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லோகநாயகி அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com