தேனியில் டெங்கு ஆய்வின்போது நகராட்சி ஊழியர்களை மிரட்டிய கும்பல் கைது

தேனியில் டெங்கு ஆய்வு பணியின்போது நகராட்சி ஊழியர்களை மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தேனியில் டெங்கு ஆய்வின்போது நகராட்சி ஊழியர்களை மிரட்டிய கும்பல் கைது
Published on

தேனி:

தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் டெங்கு தடுப்பு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

வெண்கலா கோவில் தெருவில் ஆய்வு செய்தபோது சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி இருந்தது.

இதை பார்த்த அவர் அங்கிருந்த ஆறுமுகத்தாய் என்பவரிடம் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் எதற்காக சுகாதார சீர்கேடான நிலையில் வைத்துள்ளீர்கள் என கேட்டார்.

பின்னர் நகராட்சி ஊழியர்களை கொண்டு அதனை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சி பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆறுமுகத்தாயும் அவருக்கு ஆதரவாக முருகன் (40), கருணாகரன் (40), பாண்டிச்செல்வி (30), கர்ணன் (40) ஆகியோர் நகராட்சி பணியாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதனை தட்டிகேட்ட ராஜேஷ்கண்ணன் (36) என்பவரை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சுகாதார ஆய்வாளர் சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com