

சிப்காட்(ராணிப்பேட்டை):
வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டு செல்கிறது. நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ள மக்களை காப்பாற்ற அக்கறை காட்டாமல் அவர்களை மேலும் துன்பத்திலும், துயரத்திலும் ஆளாக்கும் வகையில் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ள அ.தி.மு.க அரசை கண்டித்து வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அவரவர் வீட்டில் கருப்பு கொடி ஏற்றியும், வீட்டிற்கு முன்பாக சமூக இடைவெளியுடன் கருப்பு கொடி ஏந்தி அ.தி.மு.க அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.