காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கந்தர்வகோட்டை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கந்தர்வகோட்டை அருகே உள்ள தெம்மாவூரை சேர்ந்த ஆதிமுத்துவின் மகன் சரவணன்(வயது 22). இவரும், விராலிமலை அருகே உள்ள பனைக்குடிப்பட்டியை சேர்ந்த கவுசல்யா(21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கவுசல்யா விராலிப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

சரவணனும், கவுசல்யாவும் கந்தர்வகோட்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு சரவணன் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். அவரை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கவுசல்யா மீட்டு, கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சரவணனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆதிமுத்து கொடுத்த புகாரின்பேரில் கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com