ஜப்பானில் ஜி20 மாநாடு தொடங்கியது- வரவேற்பு நிகழ்ச்சியில் குரூப் போட்டோ எடுத்த தலைவர்கள்

ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துகொண்டனர்.
ஜப்பானில் ஜி20 மாநாடு தொடங்கியது- வரவேற்பு நிகழ்ச்சியில் குரூப் போட்டோ எடுத்த தலைவர்கள்
Published on

ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர். இன்று வரவேற்பு நிகழ்ச்சியுடன் உச்சிமாநாடு தொடங்கியது.

அப்போது, ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியாக வரவேற்று மேடைக்கு அழைத்தார். அவர்களுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர், அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். புகைப்படம் எடுத்து முடிந்ததும் மாநாட்டின் முதல் அமர்வு தொடங்கியது. தலைவர்கள் ஒவ்வொருவராக உரையாற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com