

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்றில் ‘களிமண்தரையின் நாயகன்’ ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் ராபர்ட்டா பாவ்டிஸ்டா அகுத்தை துவம்சம் செய்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக், ஸ்பெயினின் பாப்லோ பாரெனோ பஸ்தாவுடன் மோதினார். 4 மணி 17 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் பஸ்தா 4-6, 7-6 (2), 6-7 (6), 6-4, 8-6 என்ற செட் கணக்கில் ராவ்னிக்குக்கு அதிர்ச்சி அளித்தார்.
ஆண்கள் இரட்டையர் 3-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் ஜோடி 6-7(5), 2-6 என்ற நேர் செட்டில் ஜாமி முர்ரே (இங்கிலாந்து)- புருனோ சோரஸ் (பிரேசில்) இணையிடம் மண்ணை கவ்வியது.