பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பெண்கள் பிரிவில் மகுடம் யாருக்கு?

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 47-ம் நிலை வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோவும் (லாத்வியா) இன்று மல்லுகட்டுகிறார்கள்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பெண்கள் பிரிவில் மகுடம் யாருக்கு?
Published on

இந்த நிலையில் பெண்கள் ஒற்றையரில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 47-ம் நிலை வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோவும் (லாத்வியா) இன்று மல்லுகட்டுகிறார்கள். இருவரும் இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை.

இதில், அனுபவம் வாய்ந்த 25 வயதான சிமோனா ஹாலெப்புக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவர் வாகை சூடினால், கோப்பையுடன் தரவரிசையில் முதல் முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையிலும் ஏறி விடுவார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதி சுற்றுக்கு வந்த முதல் லாத்வியா நாட்டவர் என்ற சாதனைக்குரிய 20 வயதான ஆஸ்டாபென்கோவும் வரலாறு படைக்க தீவிரமாக இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com