

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடக்கிறது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
ஹெலப் இதுவரை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றது இல்லை. பிரெஞ்சு ஓபனில் 2 முறை இறுதி ஆட்டத்தில் (2014, 2017) தோற்று இருக்கிறார். இதேபோல இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் தோற்றுள்ளார். இதனால் இந்த முறை முதல் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-1, 6-2 என்ற கணக்கில் 5-வது வரிசையில் இருக்கும் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) வீழ்த்தினார். அவர் 11-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.