

விருதுநகர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் குரூப்-2 ஏ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேர்முக உதவியாளர்கள், உதவியாளர்கள், சுருக்கெழுத்துத் தட்டச்சர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய 1953 பணி காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு வருகிற 6-ந் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி தொடங்கி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
இதற்கான கல்வித்தகுதி: பட்டப்படிப்பு போதுமானது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 26-ந் தேதி ஆகும்.
இதற்கு முன்னர் இந்த அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு 11 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குருப்-2ஏ தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் ஆன்-லைன் விண்ணப்பத்தின் நகல், வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையின் நகலுடன் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகை புரிந்து பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து பயன் பெறுமாறு விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.