பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 14 டாக்டர்கள் பலி -பொலிவியாவில் சோகம்

பொலிவியா நாட்டில் டாக்டர்கள் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சாலை விபத்து
சாலை விபத்து
Published on

பியூனோஸ் அய்ர்ஸ்:

பொலிவியா நாட்டின் அப்போலோ பகுதியில் ஒரு பஸ் டாக்டர்களுடன் சென்று கொண்டிருந்தது. லா பாஸ் பகுதியில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் அதில் பயணித்த் டாக்டர்கள் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதில் 11 பெண்கள், 3 ஆண்கள் அடங்குவர் என போலீசார் தெரிவித்தனர்.

பொலிவியாவில் சாலை பராமரிப்பு மோசமாக உள்ளதால், தொடர்ந்து அங்கு சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com