கன்வார் யாத்திரையில் நவீன ஷ்ரவண குமாரர்கள் -நெகிழ்ச்சி சம்பவம்

கன்வார் எனும் இந்துக்களின் புனித யாத்திரைக்கு நவீன கால ஷ்ரவண குமாரர்கள் வருகை தந்துள்ளனர். இது குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
பெற்றோருக்கு சேவை செய்யும் ஷ்ரவண குமாரர்கள்
பெற்றோருக்கு சேவை செய்யும் ஷ்ரவண குமாரர்கள்
Published on

வடமாநிலங்களில்  சிவ பக்தர்கள் ஆண்டு தோறும் கன்வார் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கன்வார் என்றால் நீண்ட கம்பு என்று பொருள்.

நீண்ட கம்பின் இருபுறமும் கட்டித்தொங்கவிடப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பானைகளுடன் காவி உடையணிந்து யாத்திரை மேற்கொள்ளும் சிவபக்தர்கள், ஹரித்வார், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று கங்கை நீரை சேகரித்து தோள்களில் சுமந்து செல்வர்.

அவ்வாறு சேமிக்கப்படும் நீரைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு மேற்கொள்வர். இந்த பயணம் மேற்கொள்பவர்கள் கன்வாரியாக்கள் என்று அழைக்கப்படுவர். வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கன்வார் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி தொடங்கியது.

4 பேரும் யாத்திரையின்போது தங்கள் வயது முதிர்ந்த பெற்றோரை தங்கள் தோள்களில் சுமந்து வந்துள்ளனர். இவர்களது செயலை கண்ட அனைவரும், பெற்றோர் சேவைக்கு ராமாயணத்தில் சிறந்த உதாரணமாக இருக்கக்கூடிய கதாப்பாத்திரமான ஷ்ரவண குமாரர் போல இருந்தது என கூறி வருகின்றனர்.

இவர்களை நவீன ஷ்ரவண குமாரர்களாகவே யாத்திரைக்கு செல்லும் சிவ பக்தர்கள்  பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com