நான்கு வீரர்கள் சதம்: வங்காள தேசத்திற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 573 ரன்கள் குவிப்பு

எல்கர், மார்க்கிராம், அம்லா, டு பிளிசிஸ் ஆகியோரின் அபார சதத்தால் வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 573 ரன்கள் குவித்துள்ளது.
நான்கு வீரர்கள் சதம்: வங்காள தேசத்திற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 573 ரன்கள் குவிப்பு
Published on

இருவரும் வங்காள தேசத்தின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தனர். தொடக்க வீரர்களை பிரிக்க வங்காள தேச பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் பலனளிக்கவில்லை. 8 பேர் பந்து வீசினார்கள். 8 பேரின் பந்து வீச்சையும் விளாசிய இருவரும் சதம் அடித்தனர்.

தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 243 ரன்னாக இருக்கும்போது டீன் எல்கர் 113 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய மார்க்கிராம் 143 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார. இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. அம்லா 89 ரன்னுடனும், டு பிளிசிஸ் 62 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அம்லா, டு பிளிசிஸ் ஆகியோர் தொடர்ந்து விளையாடினார்கள். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்கள். அம்லா 132 ரன்கள் எடுது்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து டி காக் களம் இறங்கினார்.

தென்ஆப்பிரிக்கா 120 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 573 ரன்கள் குவித்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. டு பிளிசிஸ் 135 ரன்னுடனும், டி காக் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். எல்கர் - மார்க்கிராம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 243 ரன்கள் குவித்த நிலையில், அம்லா - டு பிளிசிஸ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 247 ரன்கள் குவித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com