அமெரிக்கா: மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி

அமெரிக்காவின் மிசவுரி மாநிலத்துக்குட்பட்ட கன்ஸாஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில் இன்று மர்மநபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடம்
துப்பாக்கிச் சூடு நடந்த இடம்
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் மத்திய-மேற்கு பகுதியில் மிசவுரி மாநிலம் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள கன்ஸாஸ் நகரில் டெக்கிலா கே.சி. என்ற மதுபான விடுதி இயங்கி வருகின்றது.

வார இறுதிநாள் என்பதால் (உள்ளூர் நேரப்படி) நேற்று பின்னிரவில் இருந்து இந்த மதுபான விடுதியில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 4 பேரின் பிரேதங்களையும் குண்டு காயங்களுடன் கிடந்த 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com