மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை செருப்பால் அடித்து ஊர்வலமாக அழைத்து சென்ற போலீசார்

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் மாணவியை பாலியல் பாலாத்காரம் செய்த வாலிபர்களை செருப்பால் அடித்து தெருத்தெருவாக கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Bhopal
மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை செருப்பால் அடித்து ஊர்வலமாக அழைத்து சென்ற போலீசார்
Published on

மத்தியப்பிரதேசம் மாநிலம் தலைநகரான போபாலில் தவறு செய்த குற்றவாளிகளுக்கு போலீஸ் அளித்த தண்டனை அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் வசிக்கும் கல்லூரி மாணவியை அவருடன் படிக்கும் சக மாணவர் தனது நண்பர்களுடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தை அடுத்து மாணவி அடுத்த நாள் போலீசில் புகார் அளித்தார். புகார் அளிக்கப்பட்ட 1 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் தெருத்தெருவாக அழைத்துச் சென்றனர். குற்றவாளிகளை தெருக்களில் நின்ற பெண்கள் அனைவரும் செருப்பால் அடித்தனர். மேலும், கையில் கிடைத்த பொருட்கள் கொண்டு கடுமையாக தாக்கினர். பெண் போலீசார் லத்தியால் அடித்து அவர்களை தோப்புக்கரணம் போட வைத்தனர். இது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com