

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. ஆர்.கே.பேட்டை பகுதிகளில் உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ஐயன்கண்டிகை கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பார்த்திபன், புவனேஸ்வரி, ஸ்வேதா மற்றும் கதிரவன் ஆகியோர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்புக்குழுவினர் தேடி வந்த நிலையில், 3 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒருவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.