சைபீரியாவில் 4 பேரை பலி வாங்கிய விமான விபத்து

விமானத்தின் என்ஜின் செயலிழந்துவிட்டதாக விமானி தெரிவித்த சிறிது நேரத்தில் விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் நொறுங்கி கிடக்கும் காட்சி
விமானம் நொறுங்கி கிடக்கும் காட்சி
Published on

மாஸ்கோ:

சைபீரியாவின் கேமராவோ பிராந்தியத்தில் இன்று சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. டானே விமானதளத்தின் அருகே நடந்த இந்த விபத்தில் விமானம் முற்றிலும் சிதைந்தது. அதில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டனர். 

விமானத்தின் என்ஜின் செயலிழந்துவிட்டதாக விமானி தெரிவித்த சிறிது நேரத்தில் விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையாக சேதமடைந்த விமானத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com