சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் கார்குண்டு தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த கார்குண்டு தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். #Mogadishubombing #carbombing
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் கார்குண்டு தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு
Published on

மொகடிஷு:

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த கார்குண்டு தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

டப்க்கா என்னுமிடத்தில் வபாரி காலல் நிலையம் அருகே நடந்த இந்த தாக்குதலில் அந்த சாலை வழியாக சென்ற பல வாகனங்கள் சேதமடைந்தும், உருக்குலைந்தும் கிடக்கும் காட்சிகளை உள்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. #Mogadishubombing  #carbombing

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com