மதுரை வாடிப்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் 8 மாத குழந்தை உள்பட 4 பேர் பலியானார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #CarAccident
4 பேரை பலி வாங்கிய கார் சாலையோர பள்ளத்தில் இறங்கி நிற்கும் காட்சி.
4 பேரை பலி வாங்கிய கார் சாலையோர பள்ளத்தில் இறங்கி நிற்கும் காட்சி.
Published on

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி.

இவருடைய மனைவி லட்சுமி (வயது 45). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஜெயபாண்டி மனைவி வசந்தி (22), முத்தன் மனைவி மரத்தி (60) ஆகியோரும் மதுரை செல்வதற்காக இன்று காலை 10 மணிக்கு பஸ்நிறுத்தம் நோக்கிச் சென்றனர்.

வசந்தி தனது 8 மாத கைக்குழந்தை ஆத்விக்கை அழைத்து வந்தார். இவர்கள் மதுரை-திண்டுக்கல் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து பல்லடம் நோக்கி கார் வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக காரின் இடதுபக்க டயர் பஞ்சர் ஆனது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதியது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  #CarAccident

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com