ஏமன்: கார் வெடிகுண்டு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலி- ஐ.எஸ். பொறுப்பேற்பு

ஏமன் நாட்டின் ஏடென் நகரில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஏமன்: கார் வெடிகுண்டு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலி- ஐ.எஸ். பொறுப்பேற்பு
Published on

வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் தென்பகுதியில் பிரபல துறைமுக நகரமான ஏடென் என்ற நகரம் உள்ளது. இந்நகரில் வடகிழக்கில் உள்ள கோர் மக்ஸார் மாவட்ட வருவாய்த்துறை அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உட்பட பலர்  காயமடைந்ததாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com