இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 4 மீனவர்கள் விடுவிப்பு

வேதாரண்யம் அருகே இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 4 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீனவர்கள்
மீனவர்கள்
Published on

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் ராமு(வயது40) மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த மாதம் 2-ந்தேதி சுஜேந்திரன், ராஜேந்திரன், ஜெயரான் மற்றும் படகு உரிமையாளர் ராமு ஆகிய 4 பேரும் மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 4 மீனவர்களும் இன்று காலை ஆறுகாட்டுதுறையை வந்தடைந்தனர். அவர்களை குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

மீனவர்களின் படகை இலங்கை கடற்கடையினர் வழங்காததால் அவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com