ஒடிசாவில் சரக்கு ரெயில் மோதி 4 யானைகள் பரிதாப பலி

ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தில் இன்று சரக்கு ரெயிலானது தண்டவாளத்தில் நடந்து சென்ற யானைகள் மீது மோதியதில் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
ஒடிசாவில் சரக்கு ரெயில் மோதி 4 யானைகள் பரிதாப பலி
Published on

ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்திற்குட்பட்ட பாக்திகி வனப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் யானைக்கூட்டம் ஒன்று கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் யானைகளை பின்னாலிருந்து மோதியது. இதில் யானைக்குட்டி உட்பட 4 யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

யானைகள் மீது ரெயில் மோதியதால் அப்பகுதியில் சில மணிநேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஜேசிபியின் உதவியுடன் ரெயில்வே ஊழியர்கள் யானைகளின் உடலை தண்டவாளத்திலிருந்து அகற்றினர். அதன் பின் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com