மெக்சிகோவில் சிறிய விமானம் விழுந்த விபத்தில் 4 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வயல்வெளியில் நொறுங்கிய விமானம்
வயல்வெளியில் நொறுங்கிய விமானம்
Published on

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ நாட்டின் வடபகுதியில் உள்ள சிஹுவான் மாநிலம். இங்கு நேற்று 4 பேர் சிறிய விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. 

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் பெண் உள்பட 4 பேரின் உடல்களை மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com