அம்பத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை- 4 பேர் கைது

அம்பத்தூர் அருகே தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 4 பேரை போலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
அம்பத்தூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை- 4 பேர் கைது
Published on

அம்பத்தூர்:

அம்பத்தூரை அடுத்த ஓரகடம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 27). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவரது தம்பி மணிகண்டன். இவர் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த போது எதிரில் வந்த அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவருக் கொருவர் தாக்கிக் கொண்டனர்.

வீட்டிற்கு வந்த மணிகண்டன் தனது அண்ணன் மகேசிடம் தான் தாக்கப்பட்டது குறித்து கூறினார். இதையடுத்து மகேஷ் தனது தம்பியை அடித்து குறித்து பாலசந்தரிடம் தட்டிக்கேட்டார்.

அப்போது பாலச்சந்தர் நண்பர்களை போன் செய்து வரவழைத்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் மகேசை கடுமையாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த மகேசை சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து பாலச்சந்தர் அவரது நண்பர்கள் சசி, சதீஷ், தினேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #puzalprison

X

Maalai Malar
www.maalaimalar.com