புரி ஜெகன்னாதர் கோவிலை ட்ரோன் கேமராவில் படம்பிடித்த 4 ரஷ்யர்களிடம் விசாரணை

புரி ஜெகன்னாதர் கோவிலை ட்ரோன் கேமராவில் படம் பிடித்த நான்கு ரஷ்யர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
புரி ஜெகன்னாதர் கோவிலை ட்ரோன் கேமராவில் படம்பிடித்த 4 ரஷ்யர்களிடம் விசாரணை
Published on

புரி ஜெகன்னாதர் கோவிலை ட்ரோன் கேமராவில் படம் பிடித்த நான்கு ரஷ்யர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

ஒடிசா மாநிலம் புரியில் பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், புரி ஜெகன்னாதர் கோவிலுக்கு இன்று காலை சுற்றுலா பயணிகளாக சில ரஷ்யர்கள் வந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த ட்ரோன் கேமராவில் கோவிலை படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார், அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் இஸ்கான் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், கோவில் படங்களை சமூக வலைத்தளங்களில்  பதிவிட்டதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த கேமராக்களை போலீசார் சோதனை செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com