தெலுங்கானா முன்னாள் மந்திரி நைனி நரசிம்ம ரெட்டி காலமானார்

தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு மிகவும் நெருக்கமான தலைவரான நைனி நரசிம்ம ரெட்டி காலமானார்.
நைனி நரசிம்ம ரெட்டி
நைனி நரசிம்ம ரெட்டி
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா முன்னாள் மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிர கட்சியின் மூத்த தலைவருமான நைனி நரசிம்ம ரெட்டி (வயது 86) கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், அந்த பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தார். 

இந்நிலையில், நைனி நரசிம்ம ரெட்டி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு மிகவும் நெருக்கமான தலைவராக திகழ்ந்தவர் நைனி நரசிம்ம ரெட்டி.  2014ம் ஆண்டு சந்திரசேகர ராவ் முதல் முறையாக ஆட்சியமைத்தபோது, நைனி நரசிம்ம ரெட்டி உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் எம்எல்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com