முன்னாள் ‘ரா’ தலைவர் ராஜிந்தர் கண்ணா துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்

துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராஜிந்தர் கண்ணா மற்றும் உல்பா இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு பிரதிநிதியாக ஏபி மாதுரை நியமித்து கேபினட் நியமன கமிட்டி அறிவித்துள்ளது.
முன்னாள் ‘ரா’ தலைவர் ராஜிந்தர் கண்ணா துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்
Published on

புதுடெல்லி:

மத்திய உள்துறை அமைச்சகத்தில் பல உயர்பதவிகள் காலியாக இருந்த நிலையில், கேபினட் நியமன கமிட்டி இதற்கான அதிகாரிகளை நியமித்து அறிவித்துள்ளது. அதன்படி, முன்னாள் ரா உளவுத்துறை தலைவரான ராஜிந்தர் கண்ணா துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான அசாமில் இயங்கி வரும் உல்பா இயக்கத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சிறப்பு பிரதிநிதியாக ஏ.பி மாதுர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ரா-வில் சிறப்பு செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com