15-வது நிதிக்கமிஷன் தலைவராக என்.கே.சிங் நியமனம்

பதினைந்தாவது நிதிக்கமிஷன் தலைவராக செலவின மற்றும் வருவாய்த்துறையின் முன்னாள் செயலாளர் என்.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
15-வது நிதிக்கமிஷன் தலைவராக என்.கே.சிங் நியமனம்
Published on

இந்தியாவின் 14-வது நிதிக்கமிஷன் 2013-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி நியமிக்கப்பட்டது. ஏப்ரல் 1, 2015ல் இருந்து மார்ச் 21, 2020க்கு உட்பட்ட காலகட்டத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து இந்த நிதிக்கமிஷன் அளித்த பரிந்துரைகள் பின்பற்றப்படும்.

அதன் பின்னர் பின்பற்ற வேண்டிய திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் அளிப்பதற்காக பதினைந்தாவது நிதிக்கமிஷன் நேற்று தேர்வு செய்யப்பட்டது. அதன் தலைவராக செலவின மற்றும் வருவாய்த்துறையின் முன்னாள் செயலாளர் என்.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 15வது நிதிக்கமிஷன் உறுப்பினர்களாக பொருளாதார விவகாரங்கள் துறையின் முன்னாள் செயலாளர் சக்திகாந்த தாஸ், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக பேராசிரியர் அனூப் சிங், பந்தன் வங்கியின் கவுரவத் தலைவர் அசோக் லஹிரி, நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் ஆகியோரும், செயலாளராக அரவிந்த் மேத்தாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com