கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி சினிமா படம் எடுக்கிறார்

கர்நாடக மாநில முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி, அரசியல் தவிர முழு நேர சினிமா தயாரிப்பாளராக மாற இருப்பதாக கூறியிருக்கிறார்.
கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி சினிமா படம் எடுக்கிறார்
Published on

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி முந்தைய எடியூரப்பாவின் பா.ஜனதா ஆட்சியில் மந்திரியாக இருந்தார்.

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு இருந்த ஜனார்த்தன ரெட்டி சட்ட விரோத சுரங்க ஊழல் குற்றச்சாட்டில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் விடுதலையான பின்பு மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

இவர் அரசியல் தவிர முழு நேர சினிமா தயாரிப்பாளராக மாற இருப்பதாக கூறியிருக்கிறார். இதுபற்றி ஜனார்த்தன ரெட்டி பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியலும் சினிமாவும் எனது இரு கண்கள் போன்றவை. நான் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை விரைவில் தொடங்க இருக்கிறேன். இந்த நிறுவனம் சார்பில் கன்னட திரைப்படங்கள் தயாரிப்பில் ஈடுபடுவேன். இதற்காக பெங்களூருக்கு குடிபெயர இருக்கிறேன். சினிமா பட தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பதே என் லட்சியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக தேச பற்று தொடர்பாக கன்னட கவிஞர் குவெம்பு எழுதிய பாடலை ஜனார்த்தன ரெட்டி வீடியோ படமாக தயாரித்துள்ளார். இந்த வீடியோ வெளியீட்டு விழா பெங்களூரில் நடந்தது. 5 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் கர்நாடகத்தின் பின்னணியில் ஜனார்த்தன ரெட்டி தோன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com