நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட 3 பேர்
கொலை செய்யப்பட்ட 3 பேர்
Published on

நெல்லை:

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் (39) என்பவரை கைது செய்தனர். இவர் ஒரு சைக்கோ கொலைகாரனை போல போலீசாரிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறான். இடையிடையே நான் ஒரு ‘சைக்கோ’ என்றும் கூறுகிறான்.

கொலையில் யார் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்ற கேள்விக்கு 3 பேரையும் நான் ஒருவனே தன்னந்தனியாக கொலை செய்தேன் என்றும் கூறி வருகிறாராம். அப்படியானால் எப்படி கொலை செய்தாய் என்று நடித்து காட்டு என்று போலீசார் கார்த்திகேயனை ஒரு காரில் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com