சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் மரணம்

ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியும் கர்நாடக மாநில முன்னாள் கவர்னருமான எஸ்.மோகன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
முன்னாள்  நீதிபதி எஸ்.மோகன்
முன்னாள் நீதிபதி எஸ்.மோகன்
Published on

சென்னை உயர் நீதிமன்றத்தில் 1954-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கிய சண்முக சுந்தரம்மோகன் 1966-ம் ஆண்டில் தமிழக அரசின் உதவி வழக்கறிஞராக மாறினார். பின்னர், அரசின் சிறப்பு வழக்கறிஞராகவும் தலைமை வழக்கறிஞராகவும் உயர்ந்தார்.

26.10.1989 அன்று கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று 5.2.1990 முதல் 8.5.1990 கர்நாடக மாநில தற்காலிக கவர்னராகவும் இருந்த நீதிபதி எஸ்.மோகன் பின்னர் 7.10.1991 முதல் சுப்ரீம் கோர்ட் அமர்வில் நீதிபதியாக பதவி வகித்து 10.2.1995 அன்று ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடும்பத்தாருடன் வசித்துவந்த முன்னாள் நீதிபதி எஸ்.மோகன்(89) நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com