ஜார்க்கண்ட் முன்னாள் காங். தலைவர் அஜோய் குமார் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிய அஜோய் குமார், இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அஜோய் குமார்
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அஜோய் குமார்
Published on

புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்ததால், அந்த கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள், தோல்விக்குப் பொறுப்பேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அஜோய் குமாரும் ஒருவர்.

இந்நிலையில், இன்று டெல்லி வந்த அஜோய் குமார், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சந்தித்து அவரது முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அவரை மணிஷ் சிசோடியா மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜோய் குமார் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com