ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான அஜோய் குமார் தலைநகர் டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
அஜோய் குமார், மணீஷ் சிசோடியா
அஜோய் குமார், மணீஷ் சிசோடியா
Published on

புதுடெல்லி:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரச் கட்சியின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் அஜோய் குமார். இவர் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா முன்னிலையில் அஜோய் குமார் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

அதன்பின்னர், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ஆம் ஆத்மி குடும்பத்துக்கு அஜோய் குமாரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com