அரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜினாமா

அரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக் தன்வர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்று ராஜினாமா செய்துள்ளார்.
அசோக் தன்வர்
அசோக் தன்வர்
Published on

அரியானா மாநில சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அரியானா மாநிலத்தில் எம்.எல்.ஏ. சீட் 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படுவதாக குற்றம்சாட்டிய அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முன்னர் காந்தி ஜெயந்தி தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

குறிப்பாக, சோஹ்னா தொகுதியில் 5 கோடி ரூபாய் பெற்றுகொண்டு வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த அசோக் தன்வர், சீட் வழங்கும் நடைமுறையே நியாயமாக இல்லாதபோது

வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com