குஜராத் முன்னாள் முதல் மந்திரி மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

உடல்நலக் குறைவு காரணமாக காலமான குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி திலிப் பரிக்கிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குஜராத் முன்னாள் முதல்வர் திலீப் பரிக், பிரதமர் மோடி
குஜராத் முன்னாள் முதல்வர் திலீப் பரிக், பிரதமர் மோடி
Published on

அகமதாபாத்:

குஜராத் முன்னாள் முதல் மந்திரியான திலிப் பரிக் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர். 1990-ம் ஆண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ.வாக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பரிக், குஜராத் மாநில வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் 1997 அக்டோபர் முதல் 1998 மார்ச் மாதம் வரை குஜராத்தின் முதல் மந்திரியாக பணியாற்றியுள்ளார். திலிப் பரிக் குஜராத் மாநிலத்தின்  13வது முதல் மந்திரி ஆவார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திலிப் பரிக் இன்று காலமானார் (82). அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

திலிப் பரிக் குஜராத் மக்களுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். அவரது மறைவு குஜராத் மக்களுக்கு பெரிய இழப்பாகும். தொழில்துறை மற்றும் பொது சேவை உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்தவர். 

பரிக்கின் அன்பான குணம் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் அவரை நேசித்தனர். பரிக்கின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com