எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணம்

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்ட முகமது மோர்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணம்
Published on

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, கடந்த ஜூலை 201 -ல் அந்நாட்டு ராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. அதிபர் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல வழக்குகள்  அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com