விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்த பெண் யார்?- போலீசார் தீவிர விசாரணை

விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் மரணம்
பெண் மரணம்
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே குளத்தூரில் இருந்து வைப்பாறுக்கு செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலை யோரத்தில் காட்டுப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து, குளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்தும், மேலும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஏதும் மாயம் தொடர்பாக வழக்கு ஏதும் பதிவாகி உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com