திருவாரூர் அருகே காட்டில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை

திருவாரூர் அருகே காட்டில் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் ஆண் பிணம் கிடந்தது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் அருகே காட்டில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை
Published on

திருவாரூர்:

திருவாரூரை அடுத்த மேட்டுப்பாளையத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. காட்டுப்பகுதியாக உள்ள இந்த இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பது இன்று தெரியவந்தது. அவரது கழுத்தில் வெட்டுக்காயம் உள்ளது. அவரை மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவ செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com