குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை பெண் பலி

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை பெண் பலி
Published on

சென்னை:

தேனிக்கு மலையேற்றத்துக்காக சென்றவர்களில் 9 பேர் தீயில் கருகி பலியான சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவர்கள் யார்-யார்? என்பது பற்றிய முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பலியானவர்களில் சுபா என்ற பெண் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது.

இவரது சொந்த ஊர் கடலூர் அருகே உள்ள திட்டக்குடியாகும். தந்தை பெயர் செல்வராஜ். சகோதரர் கமல்ராஜ். சுபா உயிரிழந்தது பற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்கு இன்று காலையில்தான் தெரிய வந்தது.

இதனைக் கேட்டதும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறினர்.

சுபாவின் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் கமல்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது எதுவும் பேச முடியாமல் தவித்தார்.

பின்னர் அழுதபடியே அவர் கூறும்போது, எப்படி யார் மூலமாக எனது சகோதரி சென்றார் என்பதே தெரியவில்லை என்று கதறினார். தொடர்ந்து பேச முடியாமல் அவர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மலையேற்ற பயிற்சியில் ஆர்வம் கொண்ட சுபா தனது தோழிகள் சிலருடன் தேனி மலைப் பகுதிக்கு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இன்று காலையில் சுபாவின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுபாவின் உடலை பெறுவதற்காக அவரது உறவினர்கள் திட்டக்குடியில் இருந்து தேனிக்கு விரைந்துள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com