அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா மனு தள்ளுபடி

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா மனு தள்ளுபடி
Published on

சென்னை:

ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னால் நேரில் ஆஜராக முடியாது என்றும் காணொலி காட்சி மூலம் தன்னிடம் குற்றச்சாட்டு பதிவு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

அவரிடம் காணொலி காட்சி மூலம் விசாரிக்க கோர்ட்டு முடிவு செய்தது. இதற்கிடையில், சசிகலா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே தரவேண்டும்’ என்று கூறியிருந்தார். இதற்கு அமலாக்கப்பிரிவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த மனு நீதிபதி ஜாகீர்உசேன் விசாரித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்சாட்டு பதிவின் போது கேட்கப்படும் கேள்விகளை சசிகலாவுக்கு முன்கூட்டியே வழங்க அமலாக்கப் பிரிவு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்றுக் கொள்கிறேன். சசிகலாவின் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இந்த வழக்கு விசாரணையை நாளை (செவ்வாய்கிழமைக்கு) தள்ளிவைக்கிறேன். அன்று சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் எப்போது விசாரணை நடத்துவது என்று முடிவு செய்யப்படும்’ என்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com