அன்னிய செலாவணி மோசடி: எழும்பூர் கோர்ட்டில் ஆஜரான சுதாகரன் மீது குற்றச்சாட்டு பதிவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான சுதாகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அன்னிய செலாவணி மோசடி: எழும்பூர் கோர்ட்டில் ஆஜரான சுதாகரன் மீது குற்றச்சாட்டு பதிவு
Published on

சென்னை பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், சசிகலா, டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், சுதாகரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த அன்னிய செலாவணி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஜெ.ஜெ.டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது, பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர் நடத்திய சூப்பர் டூப்பர் டி.வி. நிறுவனத்துக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இதில், சுதாகரன், பாஸ்கரன் மீதான அன்னிய செலாவணி வழக்குகள் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டு நீதிபதி மலர்விழி முன்பு கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனிடம், அன்னிய செலாவணி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யவேண்டும் என்றும் அதற்காக அவரை ஜூன் 20-ந்தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com